முன்னேறிய என் சமூகமே

இசக்கி,கருப்பன் விட்டுவிட்டு -இன்று
ஈசன்,மாயோன் அடிதொழுதேன்
சிறுதெய்வ வழிபாடு -அது
சாதிய வெளிப்பாடு

கொடைக்கு மட்டும் கோவில் போனேன் -இன்று
சஷ்டி,சதுர்த்தி ,நவமி என்றேன்
திதிக்கு ஒரு தெய்வம் தேடி சரண் அடைந்தேன் .

ஆடு,கோழி படையல் போட்டு
வேடிக்கை பார்த்து வீடு வந்தேன்-இன்று
ஹோமம் வளர்ப்பதே பெருமை என
வளர்த்தேன் புது 'நாகரீகம்'

கோவில் கருவறை நுழைய தடையாம் -இன்று
தீட்டு என்றால் பாவம்
புனித பயணம் 'பாரத கோவில்' எல்லாம்


கல்வி,வேலை,மரியாதை அனைத்தும் பெற்றேன்
இனி சாதிய விடுதலை பெற பிறந்த ஊர் தடை
நகர்ந்தேன் நகர் நோக்கி
சாதியை மனதில் போற்றி

எண்ணி பார்க்கையில் எப்படியோ முயன்று
தொலைத்தேன் என் சாதி அடையாளங்களை ......................
எஞ்சி நிற்பதோ ஒரு' சிறு பொறியாய்' சாதி
ஓங்கி வளர்ந்த மூங்கில் காடாய் மதம்
......................................................................
........................................................................
............................................................................
........................................................................
எரிவது என்றோ?

எழுதியவர் : கௌதமி தமிழரசன் (12-Aug-14, 1:20 pm)
பார்வை : 72

மேலே