கலி கால வியாபாரம்
பேர் அண்ட் லவ்லி இல்லை
கிளியோபெட்ரா அழகி இல்லையா???
லக்ஸ் சோப்பு இல்லை
அன்னை தெரசா அழகு இல்லையா???
ஹார்லிக்ஸ் இல்லை
எடிசன் அறிவாளி இல்லையா???
காம்ப்ளான் இல்லை
அர்னால்டு பலசாலி இல்லையா???
பூஸ்ட் இல்லை
அலெக்சாண்டர் ஆற்றல் மிக்கவர் இல்லையா???
ஹேர் கலரிங் இல்லை
இந்திரா காந்தி கம்பீரம் இல்லையா???
ஆக்ஸ் சென்ட் இல்லை
ஆதாம் ஏவாள் காதல் கொள்ளவில்லையா???
எதைத் தின்றால் பித்தம் தெளியும்
என்று பேதளிப்போரை
பயன்படுத்தி ஏமாற்றுவது தான்
கலி கால வியாபாரம்
தெளிந்திடு மனமே.....