நம்பினால் நம்புங்கள்
நேற்றைய சேமிப்பு
இன்றைய செலவு
இதுவே வாழ்க்கை
நேற்றைய கடன்
இன்றைய வட்டி
அசலும் வட்டியாய்
பிறக்கும் குழந்தையடா !
இட்ட பிச்சைக்கு புண்ணியமாய்
கழுத்தில் கட்டிய தாலியை
தாங்கிடும் மனைவியடா
உள்ளன்புடன் இட்ட பிச்சை
ஒருத்திக்கு ஒருவனாய் வாழுதடா
பெருமைக்கு ஈன்ற தர்மம்
தறுதலையாய் திரியுதடா
என் அனுபவத்தில் உண்மையடா
நம்பினால் யாவர்க்கும் நன்மையடா