இரு அத்தியாங்கள்

இரு உடல்களின்
இன்பச்சுவையாலும்
ஒரு துளி
வெண் குருதியாலும்
காலம் வகுத்து
சரீரம் கொடுத்தான் இறைவன்!

மனிதனின் வாழ்க்கை
இறைவனின் பாடத்திட்டம்
நுாலின் வரிகள்
நீண்டு செல்லாமல்
வடிவமைத்துள்ளான்!

இரண்டாவது வாழ்க்கையையும்
இன்னோர் பாடத்தில்
பதித்து வைத்துள்ளான்
ஒரு நுாலில்
இரு எழுத்துக்கள் போல!

நேற்று என் தாத்தா
முதல் பாடம் முடிந்து
இன்று இரண்டாம்
பாடம் துவங்கி விட்டார்
நாளையோ இந்த நிமிடமோ
நானும் துவங்கக்கூடும்!

முதலாம் பாடத்தின்
காலம் முடிந்ததும்
கட்டாயம் இழுத்துச் செல்லும்
இரும்புக்கரத்தையும்
மரணம் எனும் பெயரில்
மறைத்து வைத்துள்ளான்
அதுவே!
முதலாவது பாடத்தின்
இறுதி அத்தியாயமும்
இரண்டாம் பாடத்தின்
முதல் அத்தியாயமும்.

எழுதியவர் : மிஹிந்தலைஏ.பாரிஸ் (14-Aug-14, 4:58 pm)
பார்வை : 54

மேலே