நம்பிக்கை வை

இன்றைய தினம் எழுந்தவுடன் என்ன எண்ணம் ஓடியது,
என்பதை எண்ணிப்பாருங்கள்!
இது அருமையான நாள் என்று நினைத்திருந்தால்
அதை உண்மையாக நம்பியிருந்தால்,
அதற்கேற்ற நிகழ்வுகள் நடந்திருக்கும்!
இது மோசமான தினம் என்று தோன்றியிருந்தால்
அதற்கேற்ற நிகழ்வுகள் தொடர்ந்திருக்கும்!

வெற்றிகள் வேண்டுமென்றால் தோல்விகளை எண்ணாதே!
கனவின் பாதையிலே கவலைகளால் கலங்காதே!
சரித்திரம் படைக்க நினைத்தால் சித்திரமாய் உறங்காதே!
மனதின் ஆழத்திலே தோல்விக்கு காரணம் சொல்லி சுகம் கொள்ளாதே!

இது போதனைகள் அல்ல ,
ஆனால் சாதனைகள் வெல்ல இதைவிட எளிதான வழி வேறெதுவும் அல்ல!

மூன்று வித மனிதர் உண்டு நம்பிக்கை கொள்வதில்!

ஒன்று நம்பாத குணம்,பெரும்பாலும் தோல்வியின் தோழர்கள்!
மூடன் என்ற பெயருக்கு சொந்தக்காரன்!

இரண்டு நம்புவது ஆனால் நம்பாமல் நம்புவது!
முடியும் என்று நம்பி துவங்கிய பின்
முடியாதோ என்ற அவ நம்பிக்கையில்
முடிக்காமல் எல்லாம் விதி என்று சொல்லும்
முட்டாள் உழைப்பாளி

மூன்றாம் இரகம் இவனே சிறந்தவன்!
தோல்விகள் இவனுக்கு இருந்ததே இல்லை,
தோல்விகளெல்லாம் முயற்சிகளே என்று புரிந்தவன் இவன்!

இவனைப்போல் நம்பிக்கை வை!
சாதிக்கலாம் என நம்பிக்கை வை!
சிகரங்களில் உந்தன் கால்தடங்கள் பதியும்!
நிச்சயம் அது நிகழும் இது எந்தன் நம்பிக்கை!

எழுதியவர் : க.ரகுராம் (14-Aug-14, 5:41 pm)
சேர்த்தது : ரகுராம்.க
Tanglish : nambikkai vai
பார்வை : 80

மேலே