தனி ஒரு பெண்ணுக்கு சுதந்திரம்

சிந்தை விரும்பும் நிறத்தில்
உடை அணிய சுதந்திரம் இல்லை...

பிடித்த வடிவத்தில்
போட்டு வைத்துக் கொள்ள
சுதந்திரம் இல்லை....

மனம் விரும்பும் இடத்தில் அமர்ந்து
ஏலக்காய் போட்ட டி குடிக்க
சுதந்திரம் இல்லை .....

ஆசைப்பட்ட எதையும் சாப்பிட
சுதந்திரம் இல்லை..

பேச்சில், எழுத்தில்,
விருப்பத்தில், எண்ணத்தில்-என்று
எதிலும் சுதந்திரம் இல்லை......

வீட்டில் தனி ஒரு பெண்ணுக்கு
இந்த சுதந்திரம் கிடைக்கவில்லை...

நாட்டின் சுதந்திரத்தை
நான் எங்கு சென்று கொண்டாட???

எழுதியவர் : சாந்தி ராஜி (14-Aug-14, 11:05 pm)
பார்வை : 77

மேலே