மிட்டாய் நிச்சயம் உண்டு
நான் படித்த காலத்தில்
சுதந்திர தினம் என்றால்
மிட்டாய் கிடைக்கும்
இன்றும்
அது மாறவில்லை
கசப்பான அனுபவங்களை
மறக்க
இனிப்பான மிட்டாய்
நடிகனின் முகம் போட்ட
அரசியல் வியாதிகளின்
முகம் போட்ட
கொடியை
அணிந்து கொள்பவரை விட
தேசிய கொடி
அணிபவர் குறைவே
ஒடுக்கப்பட்ட
உறவுகளை
ஒரு நாள் விருந்துக்கு
அழைப்பதை போல
இன்று ஒரு நாளில்
மட்டும்
தமிழன்
இந்தியனாய்
உணர படுகிறான்
சுதந்திர தினம்
என்று
சந்தோசம் அடையும்
அளவிற்கு
தமிழன்
சுதந்திரமாய் இல்லை
முட்டி மோதி
முன்னோர்கள் வாங்கிய
சுதந்திரம்
தமிழனுக்கு இல்லை