உரியவளுக்கு வாழ்த்து
மாருதியே(அனுமன்) சரணாகதி..மரணம் தான் விதி
என்றென்னிய போது என் வீட்டுக்கு மாடத்துக்கு மட்டும்
மணிப்புறா அளித்தான் மணமாகாத
மலையை தூக்கும் மாவீரன்....
இமையை சிறையாய் வைத்து இழத்து பூட்டியவளே
பருவமான பள்ளி நாள் முதல் கடந்துவிட்ட
கல்லூரி காலம் வரை கண்டதில்லை இப்படி
ஓர் கருவிழியை....
உயிர் கொடுத்த உறவில் கூட காணவில்லை
இப்படி ஓர் சொப்பனம் ஆனால் கண்டவுடனே
உனக்கும் எனக்கும் எப்படி வந்தது இந்த பந்தம்....
எனக்காக வளர்ந்த வாழை மரமே
வந்துவிட்டது நீ முளைத்த நாள்
இதுவே என் வாழ்த்து முடிவுவரை
தூணாய் நிற்கும் துணைவிக்கு....
(பெ.பாரத்)
...என்றும் துணையாக....