ரகசியங்கள்

எல்லாருக்கும் நினைத்தபடியெ
அமைந்துவிடுவதில்லை வாழ்க்கை
எனக்கும் அப்படித்தான்
இன்றாவது குடிக்காமல் வருவாரா
என் கணவன் என்று எதிர் பார்த்து
கத்திருக்கிரென்
என் கல்யாணத்திற்கு புடவை
எடுக்க நாலு கடையில் விசாரித்த - என் அப்பா
மாப்பிளையை பற்றி விசாரிக்கவே இல்லை
அவர் அக்கா மகன் என்பதலே
எப்போதாவது நினைப்பது உண்டு
அன்று கல்லுரி முதலாம் ஆண்டில்
தட்டுதடுமாறி தயங்கி - அவன்
சொன்ன காதலுக்கு அன்றே
சம்மதம் சொல்லிஇருக்கலாம் என்று
இப்போதும் வழி உண்டு ஆனால்
மனம் இல்லை மடியில்
மகன் இருப்பதனால் - இப்படித்தான்
எல்லாருக்கும் உண்டு வெளியில்
சொல்லமுடியாத சில ரகசியங்கள்

எழுதியவர் : செ.ரூபன்ராஜ் (15-Aug-14, 12:12 pm)
பார்வை : 130

மேலே