68 ஆண்டு கால சுதந்திரம்

68 ஆண்டு கால சுதந்திரம்

தப்பு தப்பாய் தமிழ்(தாய்மொழி) பேசுவது
தடை இல்லாமல் ஆங்கிலம் பேசுவது

1000 ரூபாய்க்கு திட்டம் தீட்டி
100 ரூபாய் திட்டத்தை முடித்து
அத்தனை பணத்தை ஆட்டைய போடுவது

அப்படி ஆட்டைய போட்ட பணத்தை
அயல்நாட்டு வங்கி கணக்கில்
அடைத்து வைப்பது

இங்கிலாந்துகாரன்
இறால் ஊறுகாய் திங்க
இந்தியன் இரவு பகல்
பாராமல் உழைப்பது

அயல்நாட்டு நிறுவனத்தில்
அடிமையாக உழைப்பது

பாலஸ்த்தீனத்தில் நடக்கும்
போரை எதிர்த்துவிட்டு
பக்கத்து வீட்டிலும், நாட்டிலும்
நடக்கும் போரை கண்டாலும்
காணமல் இருப்பது

கல்வியை வியாபாரமாக்குவது
கன்னியரை விபச்சாரியாக்குவது
காளையரை தீவிரவாதியாக்குவது
மொத்தத்தில்
தான் வாழ பிறரைக் கெடுப்பது

குளங்கள் அழிந்தாலும்
குலம் வளர்ப்பதில்
குறியாக இருப்பது

மரங்கள் மாண்டாலும்
மதம் வளர்ப்பதில்
மதியாய் இருப்பது

தட்டில் எதை வைத்துக்
கொடுத்தாலும் தின்பது

விளம்பரங்களை பார்த்து
வீணாய் போவது

முக நூலில் முகம் பதிக்கும்
பெண்களின் முகத்தை கொண்டு
முழு நிர்வாணப்படம் தயாரிப்பது

முன்பின் தெரியாத பெண்ணை
முகநூல் வாயிலாக
முந்தி விரிக்க அழைப்பது

அடிமையாக இருக்கும்
ஆண்கள் கூட பெண்களை
அடிமையாக எண்ணுவது

சுதந்திரம் என்றால்
என்னவென்று தெரியாமல்
சுதந்திர தினத்தன்றும்
சுடுத்தண்ணியை காலில்
ஊற்றிக் கொண்டு
வேலைக்கு செல்வது

சுதந்திர தின கொண்டாடி
சுதந்திரம் பரிப்பதாய்
குடிமகன்கள் எண்ணுவது

இல்லாத சுதந்திரத்திற்கு
இனிப்பு வழங்கி இளிப்பது

இவை தான் இந்திய நாட்டின்
இளிச்சவாயன்கள் நிறைந்த
இந்திய நாட்டின்
68 ஆண்டுகால சுதந்திரம்

எழுதியவர் : சதீஸ்குமார் பா ஜோதி (15-Aug-14, 10:31 am)
பார்வை : 111

மேலே