கலங்காதே

மரணம் ரணமாகி
நான் மாண்டழிந்து போனாலும்
மனமே நீ
மயங்காதே!
மலர் தேன் தந்து வீழ்ந்தாலும்
மதியிழந்து வாடாதே !

உலகம் உண்மையென்று
ஓராயிரம் உரைத்தாலும்
உன் உள்ளம் உரையாடும்
ஒரு நேரம் பதில் சொல்லும்

கலங்காதே
கவலை உன்னை கொல்லும்
உன்னோடு ஊர் கொள்ளும்
கருவாகி நீ வந்த கனவெல்லாம்
கரைந்தோடும்

கலங்காதே
காலம் பதில் சொல்லும் !
உன் கனவெல்லாம் நனவாகும் !

எழுதியவர் : (15-Aug-14, 1:07 pm)
சேர்த்தது : anusha nadaraja
Tanglish : kalangkaathE
பார்வை : 125

மேலே