கனவு, யதார்த்தம், சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

'ஜன கன மன' என்று
அர்த்தம் தெரியாமல் சொன்னதைத் திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளை போன்ற உங்கள் பெண் குழந்தையைப்
பள்ளிக்கு அனுப்பிவிட்டு
ஆசிரியர்கள் சீரியர்கள் என்று
முழுமனதோடு
நம்பி நிம்மதி அடையும்
பெற்றோர்களா நீங்கள்?

உங்கள் அலுவலகத்தில்
வேலை முடிந்து
இரவு பன்னிரண்டு - ஒரு மணியளவில்
உங்கள் உயிர் - உடைமை - கற்பின் பாதுகாப்பிற்கு
எந்த பயமும் இல்லை என்று
மன உளைச்சல் இல்லாமல்
வீடு திரும்புபவர்களா நீங்கள்?

சாலையில் போக்குவரத்துக் காவலராலோ
பொது மக்கட் காவலராலோ
மிகவும் மரியாதையோடு
நடத்தப்படுபவர்களா நீங்கள்?

லஞ்சம் தராமலும்,
செல்வாக்கை பயன்படுத்தாமலும்
உங்கள் வேலை
அரசு அலுவலகங்களில் நிறைவேற்றிடும்
நபர்களா நீங்கள்?

அப்படியென்றால்,
இந்தியாவின் 0.02 விழுக்காடு சுதந்திர மனிதர்கள் நீங்கள் - இனிய சுதந்திர நல்வாழ்த்துக்கள், உங்களுக்கு!!!!

மற்றவர்கள் - விரைவில் சுதந்திரம் பெற்றுவிடுவோம்...

இன்றைய தினத்தில் இரண்டு விஷயங்கள் மட்டும் ஞாபகம் வருகின்றன

"Where the Mind is without Fear... Into that heaven of freedom, my Father, let my country awake" என்ற தாகூரின் கனவினை கல்லூரியில் ஏழு வருடங்களுக்கு முன் இதே நாளில் முழங்கியதும்...

" I would have loved my India, if I were also abroad" என்ற என் நண்பனின் T-shirt-ல் அச்சடிக்கப்பட்ட இன்றைய யதார்த்தமும் தான்!

எழுதியவர் : வைரன் (15-Aug-14, 5:30 pm)
சேர்த்தது : வைரன்
பார்வை : 271

மேலே