ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்
அஹிம்சையினாலிதை முயன்று பெற்றோம்
கோனாட்சி விட்டதை குடிகள் பெற்றோம்
கூனி இருந்தவர் நிமிர்ந்து விட்டோம்
தென்னாட்டு திலகர் கப்பல் விட்டார்
ஜென்மம் ஒன்றினில் இரண்டு பெற்றார்
நம் நாட்டு வாஞ்சி துரையை சுட்டார்
நாட்டில் அனைவரும் வீரம் பெற்றார்
யுத்தம் புரிந்திட போஸ் படை கண்டார்
உயிரையும் தந்திட நம்மவர் வந்தார்
உத்தமர் காந்தி வழியினில் நின்றோம்
ஒத்துழை யாமை இயக்கம் கண்டோம்
சத்தியா கிரஹம் வலுத்த தம்மா
சத்தியம் இங்கே ஜெயித்த தம்மா
எத்தனை தியாகியர் இன்று நினைப்போம்
ஏற்றிய தேசியக் கொடியை துதிப்போம்

எழுதியவர் : சு.ஐயப்பன் (15-Aug-14, 5:45 pm)
பார்வை : 1841

மேலே