பற்றும் வெறியும்

பற்றும் வெறியும்

பற்றுக்கும் வெறிக்கும்
பரந்த இடைவெளி

பற்றிருக்கும் இடத்தில்
அன்பும் பண்பும்

வெறியிருக்கும் இடத்தில்
அழிவும் பழியும்

பற்றுள்ளவரை எளிதில்
கண்டறிந்து விடலாம்

வெறிகொண்ட மனிதரோ
ஒளிந்தே திரிந்திடுவார்

பற்றால் வெல்வது
காலத்தை வென்று நிற்கும்

வெறியால் அழிவது
நல்லவை மட்டுமே

மொழிக்கும் மதத்துக்கும்
பற்றுமட்டும் தேவை


பற்று உள்ளவனிடம்
வெறியிருக்காது

முட்டாள்கள் அறிந்தது
வெறித்தனம் மட்டுமே

வெறியை ஒழித்து
மனிதனாய் மாற
ஆறறிவு ஒன்றே
திருவினை ஆகும்.

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (15-Aug-14, 4:10 pm)
பார்வை : 149

மேலே