உடைந்த தூரிகை

யாரும்
யாருக்குள்ளும்
அடங்குவதில்லை.....
போருக்குள்
வெற்றி
அடங்கி விடுமா?
அடங்கி விட்ட
ஆத்மாவின்
ஆற்றாமைக்கு
கல்லறை போதுமா?

மரம்
தூக்கி போவதான
கற்பனையின் முடிவு
இலையாகிப் போவது,
பயணிக்கும்
எறும்பின்
மீளாத நீர்வீழ்ச்சி
என்றால்,
வானம் அடங்குவது
தொடுவானத்திலா?

தொடாத
வளைக்கரங்களில்
மருதாணி
நிறமற்றுக் கிடப்பது
எந்த போரின் வெற்றி?

யார்தான்
அடங்குவது,
யார்தான்
அடக்குவது?
அடங்குவதும் அடக்குவதும்
அத்துமீறும்
கற்பனைகளின்
மீறாத சுவராகின்
வரைந்து
காத்திருக்கிறது
ஒரு பதில்,
கேள்வியை
உடைத்து விட்ட
தூரிகையாய்....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (15-Aug-14, 9:16 pm)
Tanglish : udaintha thoorikai
பார்வை : 348

மேலே