வரம் வேண்டி

எப்போதோ துவங்கிவிட்டது
உனக்கும் எனக்குமான
காதல்....


யாராலும் போடப்படாத
நெடுஞ்சாலையில்
உன் விழிகளோடு
பயணிக்கிறது என் உயிர்க்காற்று


உனக்கான கவிதைகள் யாவும்
உயிர்மையில்
நனைத்தே எழுதப்படுகின்றன


நீ திரும்பிப் பார்க்கிறாய்
எல்லாம்
என் திசைகளாகிப்போகிறது

உன்னை உரசியே உரசியே
கூர்தீட்டப்படும் குறுவாளாய்
என் பேனா முள்.....


என் விரல் பிடித்துப்போகிறாய்
பாதைகள் பறந்துபோகின்றன
பரவசத்தால்...
பனி ......
மழையாக பெய்யும் அதிசயத்தால்

என்னை அழைத்து
கொண்டுப்போகிறாய் நீ
நம்மை அணைத்தபடி செல்கிறது காற்று
காதல் மொழிகளை
காதில் கிசுகிசுத்தப்படி....!!!

இந்த உலகம் விடியும்வரை அல்ல
இரவும் பகலும் முடியும்வரை
காதலிப்போம் வா

சாகும்வரை வேண்டாம்
நாமாக
வாழும்வரை காதலி........


கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (16-Aug-14, 7:17 pm)
Tanglish : varam venti
பார்வை : 76

மேலே