காதல் மொழி

கவிதை எழுதும்
ஒற்றைக்கால் அருவி.....
உன்னைப் பற்றி எழுதும்போதெல்லாம்
ஆர்ப்பரித்து சிரிக்கிறது இரட்டை கடலாய்

விழிகளால் பேசி
மொழி இழக்க வைக்கிறாய்
எவ்வளவும் பேசியும்
ஊமையாகி போகிறேன்
உன்னிடம்
காதல் மொழி பேசுகையில் மட்டும் ....

என் பாதியான வாழ்க்கையை
உன்னோடு மட்டும்
முழுமையாக வாழ்ந்துவிடும்
வரம் மட்டும் தந்துவிடு ................

ஏங்கி நிற்கிறேன்
இமைகளில் இதயத்தை ஏந்தியபடி




கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (16-Aug-14, 7:49 pm)
Tanglish : kaadhal mozhi
பார்வை : 106

சிறந்த கவிதைகள்

மேலே