சாதிக்காமல் சாகத்தான் போகிறேன்
சாதிக்காமல் சாகத்தான் போகிறேன். (கவிதை)
ஆண்டுகள் ஓடிக் கொண்டிருக்கிறது..- என்
ஆயுளும் கூடிக் கொண்டிருக்கிறது.
ஆயினும் சாதிக்காமல் சாகத்தான் போகிறேன்.
தீக்குச்சித்
தான் அணைவதற்குள் ஒரு
தீபத்தை ஏற்றுகிறது.
மெழுகுவர்த்தி தான்
உருகுவதற்குள் ஒளியைத் தருகிறது.
அந்தத் தீக்குச்சியைப் போல்
அந்த மெழுகைப் போல் நானும்
சாதிக்காமல் சாகத்தான் போகிறேன்.
உளி தான்
உடைவதற்குள் ஒரு சிலையை
உருவாக்குகிறது.
பூக்கள் தான் வாடுவதற்குள்
பூவையரின் கூந்தலில் அழகு சேர்க்கிறது.
அந்த உளியைப் போல்
அந்தப் பூக்களைப் போல் நானும்
சாதிக்காமல் சாகத்தான் போகிறேன்.
வீணையின் நரம்புகள் தான்
வீண் ஆவதற்குள் நாதத்தைத் தருகிறது.
மூங்கிலில் துளைத்த ஓட்டைகள் - தான்
முடங்குவதற்குள் இசையைத் தருகிறது.
அந்த வீணையைப் போல்
அந்த மூங்கில் துளைத்த ஓட்டைகள் போல் நானும்
சாதிக்காமல் சாகத்தான் போகிறேன்.
சாதிக்க வேண்டிய பருவங்கள் சாதிக்காமல்
செத்து மடிந்தன.- சாதிக்கத் துடிக்கின்றபோது
சாவு என்னை நெருங்கி வருகின்றது.- நான்
சாதிக்காமல் சாகத்தான் போகிறேன்.
சாதிக்காமல் செத்தாலும்
தீக்குச்சியாய், மெழுகாய்,உளியாய்,பூக்களாய்,
வீணையின் நரம்புகளாய்,மூங்கிலின் ஓட்டைகளாய்
பிறப்பு வேண்டுமென இறைவனிடம் கேப்பேன்.