அதாகப்பட்டது
நினைக்கப்பட்ட உறவுதான்,
மறக்கப்படுகிறது,
அதனின் காரணங்கள்,
எடுத்தியம்பாமல் மறுக்கப்படுகிறது !
வழிய வந்து விழிகள் பேசியதெல்லாம்,
மொழிகள் நசுங்கி செவிகள் கூசியதெல்லாம்,
மறுப்புக்கு ஆளாகி நசிந்து ஓடியது,
பின் வெறுப்புக்கு பிரதானமாய் தனிமை ஏசியது !
எதற்குப்பழகினோம் என்பது தாண்டி,
எப்படி வாழ்கிறோம் என்றெல்லாம் யோசனை !
பிரிந்தவுடன் இறந்துவிடுகிறது உறவு என்றால்,
தொடர்ந்துவரும் நினைவுகள் ஆவியும் பேயுமா?
மறுப்பதற்கில்லை தோற்றுப்போனதை !
எனினும் !
மறப்பதற்கில்லை அவளின் பூமுகம் !!