கடலை போட்டு வாழ்வாரே வாழ்வார்

---கற்பனைதாங்க , ஆனா நடக்குதுங்க----

நான் முகநூலில் ராம்வசந்த் என்ற பெயரில் மீனவனை பத்தி கவிதை எழுதினேங்க.
மூனுமாசம் கழிச்சி ஒருநாள் முகநூல் கணக்கை திறந்து பாத்தேங்க..

மொத்தமே மூனு பேருதான் அந்த கவிதைய விரும்பி இருந்தான் . ரெண்டு பேரு கருத்து சொல்லியிருந்தான்.
ஒரு பயலும் பகிரல.

கருத்து சொன்ன ரெண்டு பேர்ல ஒருத்தன் என்ன கன்னபின்னான்னு திட்டி வேற கிடந்தான்.

" நீ மீனவன பத்தி மட்டும்தான் எழுதுவியா? மானவண பத்தி எழுத மாட்டியா?
எங்க கல்லூரியில் எங்கள ஒட்ட முடி வெட்ட சொல்றாங்கோ ..அவங்க உயிர பத்தி கவலைப்படறியே ..எங்க .... பத்தி அக்கறை இல்லியா உனக்கு " ன்னு என்ன வன்மையா கண்டிச்சி....

கூட ஆங்கிலத்துல இருக்கற நாலு எழுத்து , எட்டு எழுத்து , முப்பத்திரண்டு எழுத்து கெட்ட வார்ததையெல்லாம் போட்டு திட்டி இருந்தான்.

நானும் அவனுக்கு " மன்னிச்சிருப்பா , அடுத்த தடவை உனக்கு இழைக்கப்படும்
அத்தனை அநீதிகளையும்
ஐநா சபைக்கே கொண்டுபோறேன் " ன்னு பதில் அனுப்பினேன்.

அவனும் " it's okay " ன்னு பெரிய மனசோடு முடிச்சான்.

அப்பதாங்க அந்த அற்புதம் நடந்தது ...
அதே முகநூல்ல எனக்கு கீழே ஒரு பொண்ணு , ரமாவசந்தி ன்னு வந்தா.
"நான் மத்தியானம் மீன் கொழம்பு சாப்பிட்டேன்" னு போட்டாங்க.

அடடா.. அந்த பிரமாண்ட நிகழ்வு / இனமான மீட்பு நடந்த மூனு நிமிஷத்துல
முன்னூறு "லைக் " , இருநூறு " கமெண்ட் " , 100 " ஷேர் " வந்துதுங்க ..

அதுல என்ன திட்டினவன் "இந்த அரிய விஷயத்த பகிர்ந்த நீ எங்கம்மாவ ஞாபகப்படுத்திட்ட , எனக்கு அழுகாச்சிய வருது" ன்னு போட்டப்பதான்

நான் விழுந்து விழுந்து சிரிச்சேங்க.
"டேய் .... ( 4 எழுத்து வார்த்தை ) அந்த ரமாவசந்தி நான்தான்டா! / ராம்வசந்த்!!"

எழுதியவர் : ராம்வசந்த் (17-Aug-14, 10:12 pm)
பார்வை : 264

சிறந்த நகைச்சுவைகள்

மேலே