கார்த்திகை திருநாள்
நித்தமும் மலை முகடு உச்சியிலே அந்தி பொழுதன்
சுடர்மிகு கார்த்திகை தீபம் ஏற்றி நின்றான்
நிலமடந்தை வையத்து வாசலிலே நிலவொளி ஏற்றினாள்
வையத்து கூரையெல்லாம் மின்மினி விளக்கேற்றினாள்
அண்ணாமலையானை நினைவில் ஏற்றி நின்றால்
பகலும் இரவும் சேர்ந்த அந்தி பொழுதெல்லாம்
அர்த்தநாரீசன் தரிசனம் அனுதினம் காட்சியாக
நித்தம் நித்தம் கார்த்திகைத் திருநாளே .

