உழவன்

உழவன்

விடியற்காலையில் எழுந்து
சூரியனுக்கு முன்னால்
யாரும் பார்க்காத நேரத்தில்
செல்வான் வயலுக்கு

ஏர் பிடித்து உழுகையில்
இவனது நெற்றி வியர்வையில்
நிலம் முத்து குளிக்கும்

அல்லும் பகலும்
அயராது உழைத்து
அரை நிர்வாணமாக நிற்கின்றான்
ஆடையின்றி சமூகத்தில்

விதை விதைக்கிறவனோ ( உழவன் )
வெறுத்து போகிறான்
விதை விளைவிப்பவனோ ( மழை )
சிரித்து போகிறான்

தினம் தினம்
போராட்டம்
சாலை ஓரம்
தேரோட்டம்

பூ தென்றலோ வீசுகிறது
புது உயிர் வரவில்லை
வான் மழையோ பொயிகிறது
பயிரோ செயிக்கவில்லை

உழுதவனோ அழுதுபோகிறான்
விற்ப்பவனோ சிரித்துபோகிறான்
காலங்ககள் மாறுமோ
கண்ணீர் துளிகள் மறையுமா .........................


கவிஞ்சன் கௌதம்

எழுதியவர் : கவிஞ்சன் கௌதம் (18-Aug-14, 4:26 pm)
Tanglish : uzhavan
பார்வை : 301

மேலே