வாழ்வின் படிப்பினை
நாம் மறைகின்ற கதிரவனை ரசித்தாலும்
அதுவே சிலருக்கு உதயமாகிறது
நாம் வரவு என்று நினைத்தாலும்
அதுவே சிலருக்கு செலவாகின்றது
நாம் இன்பம் என்று மகிழ்ந்தாலும்
அதுவே சிலருக்குத் துன்பமாகிறது
நாம் வெற்றி என்று கொண்டாடினாலும்
அதுவே சிலருக்குத் தோல்வியாகிறது
நாம் இரவு என்று உறங்கினாலும்
அதுவே சிலருக்குப் பகலாகின்றது
நாம் பாராது செல்லும் விபத்துக்கள்
அதுவே சிலருக்குத் தலைவிதியாகின்றது
நாம் தினமும் சந்திக்கின்ற பிரச்சனைகளெல்லாம்
இரண்டு விதமாக பாதிக்கின்றன
நாம் உண்மையினை உணர்ந்தால்
அதுவே வாழ்வின் படிப்பினையாகும்