ஓடிப்போகலாம் வா - சந்தோஷ்
அன்பே..!
ஓடிப்போகலாமா ?
இந்த நாடு சரியில்லையாம்.
நாடிப்போவோம்
வேறொரு நாடு
வேறொரு உலகம்
தேடி பயணிப்போம் வா..!
பெண்ணீயம் பேசி
பெண் இருதயம் கவர்ந்து
பெண்மையை போற்றுவதாய்
பெருமிதம் போற்றும்
இந்த நாட்டின்
தாயின் முந்தானை..
சிறுமி, குமரி,கிழவிகளின்
கருவறுத்த குருதி வாசத்தில்..
அருவெறுத்து தலைக்குனிகிறாள்
மாராப்பை தொலைத்த
பாரதத்தாய்...!
மலரத்துடிக்கும் மொட்டு
பூத்துதுடித்து
வண்டு வந்து
பருகும் வரை கன்னிதானே..?
யார் சொன்னது..?
இந்திய நாட்டு
மொட்டுக்கள் பலநேரங்களில்
வண்டுகளின் சபலகத்தியால்
கன்னித்திரை கிழிக்கப்படும்
சத்தத்தில்தான் மலர்கிறது
ஆம் ஆம் அன்பே !
இங்கு மட்டுந்தான்
கர்ப்பப்பை இல்லாமலே
பெண்கள்
கர்ப்பமடைய முடியும்.
இந்நாட்டிற்கு
இப்போது காமத்தோஷம்...!
உயிருக்கு உயிராய்
உனை நேசிக்கும்
ரட்சகன் நான்..!
உனை மட்டுமாவது
பெண்மையாய்
சந்தோஷமாய்
கற்போடு
வாழவைக்கும்
பெண்ணியம் கண்ணியம்
காக்கும் உலகை
தேடுவோம் வா...!
அன்பே. வா..!
ஓடிப்போகலாம்
இந்நாட்டை விட்டு..
-இரா.சந்தோஷ் குமார்