வறுமை நிறம் என்ன - நாகூர் லெத்தீப்
ஒரு நாள்
வருமானம்
தொல்லை இல்லை
துக்கம்
இல்லை.........!
நீண்ட நாள்
போராட்டத்தை
சுமந்து வாழும்
சுமைகள் மேலும்........!
இரவு பகலாய்
பாடுபடும்
உறக்கத்தை
மறந்து வாழும்........!
ஊனத்தை
முதலாக
கொண்டு வாழ்கிறோம்
போராடுகிறோம்.........!
உலகம்
எங்களை
ஏழ்மையாக பார்க்கிறது
துரத்துகிறது.......!
எங்கு
சென்றாலும்
மனிதர்கள் தப்பித்து
செல்ல
வழியில்லை..........!
அமைதி
எங்கே
நிலையான வாழ்க்கை
எங்கே தேடிகிறோம்
வீதியிலே........!
உடுத்த உடை
இருந்தும்
உடல் தெரிகிறதே
மனம் வலிக்கிறதே..........!
தினமும்
சந்திக்கும்
யுத்தம் எங்களின்
வாழ்விலே
அனுதினமும்.........!
உதவிக்கரத்தை
தேடுகிறோம்
தவிக்கிறோம்...........!
தொடர்
வழிப்பாதை
எங்களுக்கு
தெரிகிறது
நடக்கிறோம் எங்கு
செல்கிறோம்
என தெரியாமல்..........!