இனம் கானா வியாதிகள் - நாகூர் லெத்தீப்

புதிய புதிய
கண்டுபிடிப்பு
நோய்களின் வரவேற்ப்பு........!

புரியாத
வியாதிகள்
எதிர்பாரா மரணங்கள்.........!

மனித
இனத்தின்
வளர்ச்சிகள்
மரணத்தின்
வாயில்கள்......!

தரமற்ற
மருந்துகள் உடல்
நலத்திற்க்கே
எதிரிகள்.......!

விலையற்று
போய்விட்டதா
உயிர் உலகிலே........!

அலட்சியம்
தவறான விநியோகம்
சந்தையிலே.......!

கண்டும் கானா
அரசாங்கம்
தரம் தாழ்ந்த மருந்து
விநியோகம்.....!

புதிய வியாதிகள்
கண்டுபிடிப்புகள்
நாட்டின் அதிவேக
வளர்ச்சிகள்........!

எங்கே
செல்கிறது
மனிதனின்
வாழ்க்கை முறை.........!

இயற்கையை
மறந்து மனிதன்
திரிகிறானே எதற்காக......!

முடிவை
சந்திக்கிறான்
முடிவிலே
முடிவாகிறான்
அறியாமையாலே...........!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (19-Aug-14, 12:26 pm)
பார்வை : 72

மேலே