போறாளே போறா---காதல் கவிதை---

அவள் போறாளே போறாளே போறா
நெஞ்சுக்குள்ளே வண்ணம் வீசிப் போறா
கண்ணுக்குள்ளே காந்தம் வைத்துப் போறா
மின்னும் அழகு மின்னல் போல வந்து போறா
என் காதுக்குள்ளே காதல் சொல்லிப் போறா
அவள் போறாளே போறாளே போறா...
கடல் அலையாய் என் மனம் தொட்டுப் போறா
தென்றலாய் என் முகம் துடைத்துப் போறா
வானில் இரசிக்கும் வானவில்லாய் என்னுள் வந்து போறா
அவள் போறாளே போறாளே போறா...
மல்லிகை பூவாய் மணம் வீசிப் போறா
மாலைநேர மழைத்துளியாய் மனம் நனைத்துப் போறா
மஞ்சக் காட்டு மைனவாய் மனம் கொத்திப் போறா
அவள் போறாளே போறாளே போறா...
காதல் மலரின் இதழை என்னுள்ளே தூவிப் போறா
காட்டருவியில் காதல் பூவாய் மிதந்து போறா
மயிலிறகாய் இதமாய் இதயம் வருடிப் போறா
அவள் போறாளே போறாளே போறா...
சாலையில் கானல் நீராய் கண்ணீல் தோன்றிப் போறா
சந்தனத்தில் மலர்ந்த முகமாய் நெஞ்சில் பதிந்து போறா
கண்ணாலே மயக்கி என் இதயம் திருடிப் போறா
அவள் போறாளே போறாளே போறா...
...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..