சந்தோசக் கண்ணீரே -Mano Red

தனக்குத்தானே
அழித்துக் கொண்டேன்,
தனித்து என்னை
தொலைத்து விட்டேன்,
நிலவைப் பார்த்தே
கலங்கி நின்றேன்,
நிதமும் உன்னை
மறக்க நினைத்தேன்...!!

விரல்முனை
கத்தி எறிகிறேன்,
விரும்பியே
உன்னை மறக்கிறேன்,
இது இருந்துமே
இங்கு சிரிக்கிறேன்,
கண் இரண்டிலும்
கொஞ்சம் அழுகிறேன்...!!

ஆள் யாரும் இல்லாமல்
அருவமும் தெரியாமல்
குருகிப் போனேன்,
குருதி வழிய
உறுதி குறைய
உருகிப் போனேன்
உடல் இளைத்துப் போனேன்..!!

இதயம் வலிக்க
இளமை சிரிக்க
அலைந்து அலைந்தே
அலுத்துப் போனேன்,
உலகம் வெறுக்க
உயிரும் துறக்க
இறங்கி வந்தே
இறக்கத் துணிந்தேன்...!!

அவளின் ஆசையும்
காலடி ஓசையும்
நெஞ்சில் படிகிறதே,
சந்தேகமும்
சந்தோசமும்
கண்ணீராய் வடிகிறதே...!!

எழுதியவர் : மனோ ரெட் (20-Aug-14, 10:26 am)
சேர்த்தது : மனோ ரெட்
பார்வை : 40

மேலே