உணர்ச்சி பெறு -சந்தோஷ்

உன்விழி காதலில்
எனக்கான வழியை காட்டு.
நீ காட்டும் திசையில்
திருமணவழி என்றாலும்
மரணவலி வந்தாலும்
உனக்காக
நான் ஏற்றுக்கொள்வேன்.
என் விழியதிகார நாயகியே...!

உன்னிடம் கேட்பதும்
நான் மன்றாடுவதும்
காதல் அல்ல
உணர்ச்சி...!

என் செல்ல
கல் நெஞ்சமே.
உணர்ச்சிப்பெறு..!

உணர்ந்து
உணர்ச்சிப்பெறட்டும்
உனக்குள்ளிருக்கும்
என் மீதான
உன் காதல்.

------------------------------------------------------------------------------

சும்மா பொழுப்போக கிறுக்கியது,.


- இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (20-Aug-14, 9:46 am)
பார்வை : 139

மேலே