இதயம் தேடும் பிறவி
இறை தேடும் துறவி
நான் உன் இதயம் தேடும் பிறவி
தந்துவிட்டேன் என் மனம்
மறக்காதே எடுத்துப் போடி
கேட்டுவிட்டேன் உன் மனம்
மறுக்காதே கொடுத்துப் போடி
உன்னோடு என் காதல் உண்மையடி |
காண வந்தேன் ஆசையில்
உந்தன் முகம் திருப்பிவிட்டாய்
வெட்கமா வெறுப்பா தெரியவில்லை
நீயும் என்னைக் குழப்பிவிட்டாய் |
எழுதிவைத்தேன் உன் பெயரை
என் மனதில் நன்றாய்
விழிநீர் வழிந்தும் அழியவில்லை
என் காதல் குடையாய் |
நீ நடந்த பாதையெல்லம்
பின்தொடர்ந்தேன் உன் நிழலாய்
நிழல் இன்றி தவிக்கிறேன்
ஒருதலைக் காதல் இருளாய் |
நீ ரசித்த அழகையெல்லாம்
ரசித்திருந்தேன் நான் தனியாய்
காலம் என்று வரும்
ரசித்திருக்க நாம் ஒன்றாய் |
கடலுக்கு அடியில் மூச்சடக்கி
காதல் தவமிருந்தேன் சிலையாய்
தவம் கலைக்க கண்முன்வந்து
காதல் தந்துவிடு வரமாய் |