எங்கே என் அவன்

எனைக் காணும்
கண்களில் எல்லாம்
விழிப் பொருத்தி பார்க்கிறேன்

நான் பார்த்த
விழி மையங்களில்
உனைத் தேடுகிறேன்

விழிப் பொருத்தம்
பார்க்கும் ஜோசியனாகிய
ஜாதகியோ நான்

நான் கேட்க
மறந்த புதுப்பாடலா நீ

என் கை நழுவிச் செல்லும்
மென் காற்றோ நீ

இந்த தேகத்தின்
காவலனோ நீ

அவனா இல்லை
இவனோ இல்லையில்லை
உன்னைப் போல்
ஒருவனும் இங்கில்லை

ரசனைகளுக்கு இடையில்
இழை பிரியாமல்
நம் சந்திப்பு
நிகழ்ந்திருக்குமோ

நீ எனைக்
கண்ட நொடியில்
பார்வை இழந்திட்ட
பாவையோ இவள்

இதழ் பேச
மறந்திட்ட நொடிகளை
நிந்தித்து என்ன பயன்

உன் ஞாபகங்கள் நனைத்திடும்
நிலாப் பொழுதுகளில்
இமை இழந்த
சிலையாகிறேன் நான்

நீ மரித்துப் போகவுமில்லை
இனிமேல் பிறக்கப் போவதுமில்லை
வளர்ந்தது போதும்
வாழ்ந்திடலாம் வா!!

எழுதியவர் : கார்த்திகா AK (20-Aug-14, 4:14 pm)
Tanglish : engae en avan
பார்வை : 139

மேலே