இமயம்
துறவறம் பூண்டவன்
தரிசிக்க செல்கிறான்
விதவை பெண்ணை
பாலிய திருமணம்
பாதியில் மரணித்த கணவனால்
வெள்ளாடை தரித்து
விண்ணுயர நிற்கிறாள்
விதவை பூண்ட பருவ மங்கை
விடவில்லை காம நாய்கள்
பகலும் இரவும்
கற்பை பாதுகாக்க
கண்விழித்து காவலர்கள்