நீயோ என் நெஞ்சை ஏற்றிட தானா

வெள்ளை உடையில் ஒரு தேவதையோ
கண்களில் இவளின் கனவா;

மழையில் மிதக்கும் ஓர் படகாய்
மிதப்பது எனது மனதா;

விண்ணிலே பிறந்து வரும் மழை போல்
மண்ணிலே இறங்கும் பெண்மை இவளோ;
இறகு கனமாகும் காரணத்தால்
சிறகு இல்லாத தேவதையோ;

கடல் பிரிந்து,காற்றோடு திரிந்து ,மழையாய் இறங்கும் ,நீர்த்துளி போல்
காதலை கொடுத்து ,என்னோடு சேர்ந்து ,வாழ்வை கடக்கும், பெண் இவளோ

ஓ அரிதாரம் பூசி வாழ்கிறேன்
ஆதாரமாய் உன்னை கேட்கிறேன்

உன் எண்ணம் போல் நடக்கிறேன்
உன்னோடு சேர்ந்து சுவாசிக்கிறேன் நேசிக்கிறேன்

நீயோ என் நெஞ்சை ஏற்றிட தானா

எழுதியவர் : pavithrankk (20-Aug-14, 7:59 pm)
பார்வை : 71

மேலே