முரணின் தேடலில்

==============================
சாப்பிட வந்தவனுக்கு
பசியோடே பரிமாறுகிறான்
உணவகங்களில்
==============================
சிரித்தும் அழுகிறது
அழுதும் சிரிக்கிறது
உலகறியா குழந்தைகளும்
===============================
சூது தர்மத்தையும்
தர்மம் சூதையும்
கவ்வி சிரிக்கிறது நாணயங்களில்
===============================
அரசுக் கடைகளில் போதை
சாலை வளைவில் பிடிபட்டதில்
நிதியில் தள்ளாடுகிறது நீதி....
===============================
சிந்திப்பவனும்
சிந்திக்காதவனும்
மறந்தும் மறக்காதது பணத்தை.....
===============================
முரணை அள்ளி
தடம் விரித்து
முரண்படுகிறது புதுமை.....
===============================

எழுதியவர் : சர்நா (20-Aug-14, 9:28 pm)
பார்வை : 268

மேலே