தனிமை

தனிமை
அனுபவித்து பார்
உனக்கு தெரியும்
அது எத்தனை வலியது என்று

தனிமை
உறவுகளின்
அவசியத்தையும்
நேசத்தையும்
கற்றுத்தரும் பல்கலைகழகம்

தனிமை
நன்றிகளையும்
மன்னிப்புகளையும்
பறைசாற்ற அனுமதிக்க ஆலயம்

தனிமை
உன் உள்மனதின்
வக்கிரங்களையும்
இச்சைகளையும்
வெளிக்கொண்டுவரும் பிரம்மாஸ்திரம்

தனிமை
உன் வாழ்கையின் அர்த்தகளை
புரியவைக்கும் அரிச்சுவடி

தனிமை
ஒருமுறை அனுபவித்தால்தான் தெரியும்
ஆயுள் முழுதுவதும்
இனி எப்பொதுமே வேண்டாம் என்று...

தனிமை
அனுபவித்து பார்
உனக்கு தெரியும்
அது எத்தனை வலியது என்று

எழுதியவர் : (21-Aug-14, 2:20 am)
சேர்த்தது : dhamodharan
Tanglish : thanimai
பார்வை : 83

மேலே