கவனமடா

உள்ளம் கொதித்து பொங்கும் நேரம்
====பொறுமை காத்தலே சிறந்ததடா !
ஆத்திரம் அறிவை மறைக்கும் தருணம்
====உதிர்க்கும் வார்த்தையில் கவனமடா !!
மனதில் பட்டதை மறைக்காமல் சொன்னால்
====உறவும் பகையாய் மாறுமடா !
பூசி மெழுகி நடிக்கத் தெரிந்தால்
====நல்ல பேரும் கிட்டுமடா !!

எழுதியவர் : ராஜ லட்சுமி (21-Aug-14, 12:12 am)
பார்வை : 76

மேலே