படிப் படியாய் முன்னேறு

விடியலது எதற்காக ?
படித்து விடு உனக்காக..!!

படர் கொடியாய் புன்னகைத்து
படிப்படியாய் முன்னேறு... இதோ
பக்கம் வந்துவிட்டது உன் வானம் - அதை
பட்டனவே நீ கைப்பற்று...!!

உள்ளங்கை சூரியனை இப்போது
ஊதி விடு அது ஆறட்டும் - இனி
கொதித்து எழ மனிதர் இல்லை - அவர்
கொண்டாடி மகிழவே நாட்கள் செய்வர்...!!

நீதானே உலகம் என்று உன்
நெஞ்சினிலே நினைத்து விடு
நிம்மதியாய் வாழ்ந்து மகிழ்ந்து
நீ சொர்க்கம் உருவாக்கு....!!

சுயநலத்தை களை எடுத்து
சுக விளைச்சல் பெருக்கி விடு..!!
சும்மா இரு என்றே உன்னை
சுணக்கும் மனத்தை ஆணை இடு..!!

எழுதியவர் : அரிகர நாராயணன் (21-Aug-14, 6:44 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 511

மேலே