எங்கும் மகிழ்ச்சி பெருகட்டும் - எல்லோரும் நலமாய் வாழட்டும்

முழு சக்தியை குவித்து வைத்தே
முயற்சியை நாம் எடுத்திடுவோம்
முடியும் நம்மால் எதுவும் முடியும்
மூவுலகை ஆட்சி செய்வோம்.....!

நான் பெரிதா ? நீ பெரிதா ? எனும்
நாய் குணங்கள் நமக்கெதற்கு ?
நாம் உயர்வோம் ஒருங்கிணைந்து என
நலமுறவே செயல்படுவோம்....!!

வெற்றி இனி நம் கையில்
வேளை இல்லை களைப்பதற்கு
விரைந்து எழும் சூரியனே - எம்
விழிகள் உனக்கு ஒளி கொடுக்கும்..!!

காற்றே நீ கவலையுறாதே - எங்கள்
கைகள் வீசி விசிறி விடும்....!
நிமிர்ந்து நாங்கள் நடக்கையிலே
நிலவு எங்கள் தலை தட்டும்...!!

எழுதியவர் : அரிகர நாராயணன் (21-Aug-14, 6:30 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 222

மேலே