மலர்ச் செடியும் - மனிதனும்

வேறது நீரினை உறிஞ்சி
விரைவாய் சிரிக்கும் மலராக்
நாமதை தெளிவாய் புரிஞ்சி
நலமாய் வாழ்வோம் இனிதாக...!!
நீரதை அனுபவம் எனச் சொல்வோம்
நிச்சயம் முயற்சியை வேர் என்போம்
நிதான மனதை மலர் என்போம்
நித்தமும் மணம் வீசி வாழ்ந்திடுவோம்...!!
படித்தால் மட்டும் போதாது - மனம
பக்குவம் அடையும் வரை ஓயாது - நல்ல
பண்பை நாமும் பழகோணும் - அதற்கு மனதை
பட்டென அடக்கி வாழோணும்....!!