சாமர்த்தியம்
மலையையே சூழும் மழை!
மலையையே குடையும் எலி !
மலையையே சரிக்கும் மண் !
மலையையே பிளக்கும் வெடி !
இவையெல்லாம் மலையை -விட
பன்மடங்கு ஆற்றல் உடையது
அல்லவெனினும்
மலையைக் காட்டிலும்
சாமர்த்தியம் உள்ளது !
பின்பு ஏன் ?
மனிதனுக்கு மனிதன்
உன்னையே நான்
மலை போல நம்பி உள்ளேன் -எனக்
கூற வேண்டும் !
மாற்றுவோம்-நம்
திருவாசகத்தை!
மறுப்பு சொல்ல
மறுமொழி ஒன்றை
கூறுவோம் ....!