முயற்சி

என் வாழ்க்கை கனவுகள்
நாளுக்கு நாள் அதிகரிக்கிறது

கார் , பங்களா என கனவு
காணவில்லை - வீட்டைச்
சுற்றி மரங்கள் நிறைந்த
சின்ன வீட்டுக்கு ஆசைப்பட்டேன்

டாக்டர் , லோயர் என கனவு
காணவில்லை - எதிர்காலத்தில்
நல்தலைவர்களை உருவாக்க
ஆசிரியையாக ஆசைப்பட்டேன்

நாடு பேசும் பெண் நான் என்
கனவு காணவில்லை - யாரும்
அறியா சமூக சேவகியாக
ஆசைப்பட்டேன்

ஒன்று நிறைவேறியது ஆனால்
மரங்கள் இல்லை - வீட்டைச்
சுற்றி மாடிகள் காணப்பட்டது

இரண்டிற்கு முயற்சித்தேன்
எனக்கு ஆசிரியர் தகுதி
இருக்கிறது என்றனர் - ஆனால்
லஞ்சம் கேட்டதால் திரும்பி வந்தேன்

மூன்றை செய்து வருகிறேன்
சமூக சேவகி என வீட்டார்
அறிந்ததும் - பதினெட்டு
வயதில் உன்னால் முடியாது
என அடக்க முனைகின்றனர்

இருந்தும் தளர்ந்து விடவில்லை
மீண்டும் ஆரம்பித்திருக்கிறேன்
மூன்று ஆசைகளையும்
அடைவதற்கான போராட்டம்
இம்முறை தோல்வியடைய
மாட்டேன் எனும் உறுதியோடு .......

எழுதியவர் : fasrina (21-Aug-14, 9:28 am)
Tanglish : muyarchi
பார்வை : 183

மேலே