நீ மட்டும்

நீ சுவாசித்த காற்றை நான் மட்டும்
சுவாசிக்க வேண்டும்...
நீ பாதம் பதித்த நிலத்தை நான் மட்டும்
தாங்க வேண்டும்...
உன் உயிரில் நான் மட்டும்
நிஜமாக வாழ வேண்டும்...
உன் கண்ணசைவில் நான் மட்டும்
கிடக்க வேண்டும்...
என் கண்களில் உன் விம்பம் மட்டும்
தோன்ற வேண்டும்...
என் இதயத்தை என்றும் நீ மட்டும்
ஆள வேண்டும்...
என் துக்கத்தையும் தூக்கத்தையும் நீ மட்டும்
பறிக்க வேண்டும்...
என் சோகத்ததிலும் சுகத்திலும் நீ மட்டும்
பங்காக வேண்டும்...
என் ஆத்மா அழியும் போது நீ மட்டும்
அருகில் இருக்க வேண்டும்...