மூடுபனி

மூடுபணி மூடிய பாதை
மெதுவாய் பனித்திரை நடுவே முழுமதி முகம்
முகம் கண்ட கணம் என் மனம் அவள் புறம்
முழு மனம் களவு செய்தாள்
மறுகணம் மறைந்து போனாள்
மதி முகம் மறுமுறை காண
மூவுலகம் முழுதாய் அலைந்தேன்
முத்தென மிளிரும் அவள் முறுவல் கண்டு
மயங்கிய மனம் மிதந்தெங்கோ போனது
மாது அவள் கண்ணில் இங்கு மது ரசம் வழிந்தது
முத்துக்கள் பதித்த முழு மதியே
எனக்கு முத்தம் ஒன்று தாராயோ??
மறுமொழி கூறா நிற்கும் பெண்ணே
முழுதாய் உன்னை தாராயோ??

எழுதியவர் : சத்யா யமுனை (21-Aug-14, 11:51 am)
பார்வை : 946

மேலே