மலரினும் மெல்லியதா
![](https://eluthu.com/images/loading.gif)
இரு வயிறுக்காகவும்
ஏதோ கனவுக்காகவும்...
நான்,இங்கு இருக்க
நீ,அங்கு கிடக்க...
நம் இளமையை
கண்ணீர்
கரைத்து விடட்டும்.
நீ கிழவியாகிடு.
நான் கிழவனாகிறேன்.
உயிரோடிருத்தலே
உசிதாமாகிடும்.
என் செய்வது ?
காமம்
தசைநார்களை இழுத்து ...
மேலேபுரண்டு
பாடாய்படுத்த
குடுவையொன்றெடுத்து
விழும் வரை
குடிக்கிறேன்.
உன்னையும்
அதே சனியன்
விரட்டி துரத்த
உதிரம் பிழம்பாகி
உத்திரம் வெறித்து
உன்னையே
சபிப்பாய்.
...
என்னயும் சபி.!
ஆனால்...
நாளைகாலை
அலைபேசியில்...
எவனோ மணந்தது
எவளோ ஓடியது
எதை வேண்டுமாலும்
சொல்
"என்னால முடியலங்க"
மட்டும் வேண்டாம்
வேலையை ராஜினாமா
செய்ய விரல்கள் நடுங்கும்
வயிறும் கனவும்
வீணாய் போகும்
...
என்னை இழந்தாலும்
பரவாயில்லையடி
இழப்பைச்சொல்லி
மட்டும் கதறாதே.!