வறுமைக்கோடு

" கொடி" காத்த
குமரன் வாழ்ந்த மண்ணில்
" குடி" காத்து
வாழ்ந்து மடிகிறோம் ...!

எத்தனை தூரம்
ஓடினாலும்
இன்னும்
வறுமைக்கோட்டை
மட்டும் தாண்டவே முடியவில்லை ...!

இரவில்
வாங்கியதால் தானே
நூறு கோடியை
எளிதில் தாண்டி விட்டோம்......?

வறுமை நீங்க
கொடி பிடித்தவர்கள்
வளமையாய்
வலம் வருகிறார்கள்
இன்னும்
வறுமை மட்டும் தான் நீங்கவில்லை ...!

ஏழைக்கான
ஏணிப்படிகளை
தயாரிக்கும் பொழுதே
ஊழல் பூச்சிகள்
பாதங்களை
பதம் பார்த்து விடுகின்றன ...!

அதனால் தானே
ஏழைகளின்
ஊன்று கோல்கள்
ஊன்றுவதற்கு
முன்பே ஒடிந்து விழுகின்றன .....!

கொடி காத்த
குமரன் நாட்டில்
"குடி" காத்து
மயங்கி கிடக்கும் பொழுது..

சுதந்திர தேவியோடு
எப்படி
சிரித்து விளையாடுவது ...?

எழுதியவர் : வெற்றி நாயகன் (21-Aug-14, 9:08 pm)
பார்வை : 93

மேலே