ஆனந்தமான வாழ்க்கை
![](https://eluthu.com/images/loading.gif)
அழுகையுடன் நான் பிறந்ததை ஆனந்தத்துடன்
கொண்டாடினார்கள் என் குடும்பத்தினர்கள்...
என் ஐந்து வயது வரை அவவில்லாத ஆனந்தம்
என் குடும்பம் மட்டும் தான் என எண்ணி
கோலாகலமாக கொண்டாடினேன்...
பள்ளி பருவத்தில் அந்த பிஞ்சு உள்ளம் கொண்ட
நஞ்சு இல்லா நன்மை தீமை தெரியாத
வேடிக்கையான விளையாட்டு பருவம் தான்
விண்ணை தொடும் அளவு ஆனந்தம்
என எண்ணி இருந்தேன்....
கல்வியில் சிறக்க நல்லதொரு குடிமகனாக
உருவெடுக்க ஊன்றுகோலாக அமையும்
கல்லூரி பருவத்தில் கவலை ஏதும் இன்றி
கண்ணில் ஒரு புது ஒளி வீசி
நட்பு என்னும் சுவாசத்தை உணர்ந்து
புது மனிதனாக உருவெடுத்து
புயல் அளவு வேகம் கொண்டு
பூவின் விரிதலையும் புரிதல் கொள்ளும்
புன்னகை மனிதனாக புவி முழுவதும்
உலா வரும் அந்த விடலை பருவத்தையே
ஆனந்தத்தின் ஆணி வேராக எண்ணி இருந்தேன்...
சொந்த காலுன்றி சுகமாய் வாழ
அந்த சொர்க்கத்தையே விலை கேட்கும் அளவு
சூடான இரத்தத்துடன், என்னை சுமந்தவளை
அந்த சொர்க்கத்தின் ராணியாக்கி
கண் சொக்கும் படி அழகு பார்க்க
துணை புரியும் பண தேவையை
பூர்த்தி செய்யும் புதிய முயற்சியுடன்
உறுதியாக கால் பதித்த அந்த
உழைக்கும் பருவத்தையே
உலகின் உச்ச கட்ட ஆனந்தமாய்
உறுதியாக எண்ணி இருந்தேன்...
இரு மனம் இணையும் திருமண உறவில்
ஒரு மனமாகத்தான் கால் வைத்தேன்
அவளின் கடை கண் விழிகளில் என்
ஒரு மனமும் அவளுடன் சென்றது...
இல்லறம் எனும் இன்பத்தில் இனிமையை
வாழ்ந்த தருணத்தில் கிடைத்த
ஒரு புது உயிர்(குழந்தை) அத்தருணம்
என்னால் விண்ணுலகத்தில் பறக்கும் அளவு
வித்தியாசமான ஆனந்தத்தை உணர்ந்த
அந்த குடும்ப வாழ்க்கை தான்
உமரி முனையையே கடந்த அளவு
பெரிய ஆனந்தம் என எண்ணி இருந்தேன்...
இப்படி ஆனந்தத்தை எங்கே எங்கே என
தேடி தேடி அனுபவித்தேன்..
ஆம் இளமை பருவம் முதல் முதுமை வரை
ஆனந்தம் இதில் தான் இதில் தான் உள்ளது
என எண்ணி இருந்தேன்....
பிறகு தான் தெரிந்தது ஆனந்தம் என்பது
பருவத்தில் இல்லை அவரவர் வாழ்க்கையை
பார்க்கும் விதத்திலும், அதன் பக்குவத்திலும்
தான், என்று நான் உணர்ந்த போது
நான் இருந்த இடம் எமனின் காலடி...