கார்த்திகா-க்கு பிறந்தநாள் வாழ்த்து - சந்தோஷ்
![](https://eluthu.com/images/loading.gif)
இவள்
உள்ளத்தால் சிறுமழலை- எழுத்து
திறமையில் பெருமுதலை.
அண்ணா என்று எனை
இவள் அழைக்கும்போது
என் மனதில்
மயில்தோகை விரித்திடும்
என் விழியில்
கண்ணீர்ரேகை ஓடிடும்.
ஆம்
உள்ளத்திலிருந்து எழும்
உண்மையான உறவுப்பெயர்
எப்போதும் கொடுத்திடும்தானே..
புதுமையாய் ஒரு புத்துணர்ச்சி.
கார்த்திகா...!
என் தங்கைக்கு
இன்று பிறந்தநாள்....!
பாசத்திற்குரிய தங்கையே..!
சற்றுமுன் தான்.
வானத்து மேககூட்டத்தில்
என் குறிப்புசீட்டு வாசிக்கப்பட்டது.
உன் இல்லத்து சாளரத்தில்
கொஞ்சம் எட்டிப்பார் தங்கையே..!
வாசிக்கப்பட்ட குறிப்புசீட்டு
உன் பிறந்தநாளுக்கான
வாழ்த்துமழையாக பொழிகிறதுதானே..!
எல்லா வளமும் பெற்று
நிம்மதி செல்வத்தோடு
சகலமும் அமையப்பெற்று
நீடுழி வாழ்கவென வாழ்த்துகிறேன்.
✿✿✿ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா..!! ✿✿✿
-எழுத்து குடும்பத்தின் சார்பாக
உன் அண்ணன்
-இரா.சந்தோஷ் குமார்.