+என் விருப்பம்+

விருப்பப்படும் பொழுதுகள் நீடிப்பதில்லை
விருப்பப்படும் உணர்வுகள் தொடர்வதில்லை
விருப்பப்படும் எதுவும் நிலைப்பதில்லை
விருப்பம்மட்டும் எழாமல் இருப்பதில்லை

விருப்பப்பட்டு நிலவைவிருந்திற்கு கூப்பிட்டேனே!
விருப்பப்பட்டு வானவில்அணிய வரச்சொன்னேனே!
விருப்பப்பட்டு விண்மீனைக்காலில் விழச்சொன்னேனே!
விருப்பமென்று நிறைவேறுமென காத்திருக்கேனே!

விருப்பம் திருப்பம் தந்திட்டால்
விரும்புதல் எதுவும் தப்பில்லையே!
விருப்பம் தீமைகள் தருமென்றால்
விருப்பம் தவிர்த்தல் நலம்தானே!

விருப்பம்கொண்டு கவிதைபல படைத்திட்டேனே!
விருப்பம்கொண்டு கவிதைபல படித்திட்டேனே!
விருப்பத்திற்கும் என்விருப்பம் பிடிக்கும்தானே!
விருப்பமுள்ளோர் விருப்பம்கொண்டே தெரிவிப்பீரே!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (23-Aug-14, 12:43 am)
பார்வை : 639

மேலே