+அழகு அவசியமே+

அழகான பாட்டொன்று சமைப்பதற்கு
அழகான வாழ்க்கையது அவசியமே!
அழகான கூடொன்று கட்டுதற்கு
அழகான குடும்பமது அவசியமே!
அழகான சிறகொன்று விரிப்பதற்கு
அழகான காற்றடித்தல் அவசியமே!
அழகான உறவொன்று பிறப்பதற்கு
அழகான அன்புக்கடல் அவசியமே!

அழகான இன்னிசைகள் உருவாக‌
அழகான ஸ்வரங்களுமே அவசியமே!
அழகான பண்புமனதில் கருவாக‌
அழகான சூழ்நிலைகள் அவசியமே!
அழகான விதைகளுமே தருவாக‌
அழகான நீர்த்துளிகள் அவசியமே!
அழகான கதைகளுமே காட்சிபெற‌
அழகான எழுத்துக்களும் அவசியமே!

அழகான உலகமது அமைதிபெற‌
அழகான மனிதர்களும் அவசியமே!
அழகான உள்ளமது பெற்றிடவே
அழகான சிந்தனைகள் அவசியமே!
அழகான கவிதைகளும் உருவெடுக்க‌
அழகான கருப்பொருளும் அவசியமே!
அழகான காட்சிகளும் அழகுபெற‌
அழகான வர்ணனைகள் அவசியமே!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (23-Aug-14, 8:00 am)
பார்வை : 287

மேலே