+அழகோ அழகு+
அம்மாவின் திட்டும் அழகு!
அப்பாவின் கொட்டும் அழகு!
அண்ணாவின் அதட்டல் அழகு!
அக்காவின் மிரட்டல் அழகு!
அத்தனையும் மறந்து விட்டு
கூட்டாஞ்சோறு உண்ணும் வேளை
வாழ்க்கைதான் அழகோ அழகு!
நண்பனவன் முறைப்பும் அழகு!
எதிரியவன் சிரிப்பும் அழகு!
தோழியவள் அடியும் அழகு!
காதலில்காத்திருக்கும் நொடியும் அழகு!
சின்னசின்ன விஷயங்களுக்காய் வாழ்வை
சின்னாபின்னமாக்காமல் சேர்ந்திருக்கும் போது
வாழ்க்கைதான் அழகோ அழகு!
மழலைகளின் புன்னகை அழகு!
மாலைதரும் சாரல் அழகு!
தவளைகத்தும் ஒலியும் அழகு!
கவலைபோக்கும் இயற்கை அழகு!
கிடைக்கும் சிறுசிறு சந்தோசங்களில்
வாழ்வை அனுபவிக்க பழகிக்கொண்டால்
வாழ்க்கைதான் அழகோ அழகு!